search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்தல்"

    • தேர்தல் ஆணையம் தனி வாக்குச்சாவடியை அமைத்தது.
    • வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹரிதாஸ், ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

    குஜராத்:

    பாராளுமன்ற தேர்தலில் நேற்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பனேஜ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒரே ஒரு ஓட்டு போட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வாக்காளர் உறுதி செய்துள்ளார்.

    கிர் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள பனேஜின் கோவில் பூசாரியான மஹந்த் ஹரிதாஸ், ஜூனாகத் பாராளுமன்ற தொகுதியின் கீழ் வரும் வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட ஒரே வாக்காளர் ஆவார். அவருக்காக தேர்தல் ஆணையம் தனி வாக்குச்சாவடியை அமைத்தது.

    நேற்று காலை 11 மணியளவில் மஹந்த் ஹரிதாஸ் வாக்களித்தன் மூலம் வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.

    வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹரிதாஸ், ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

    • மக்களின் ஆசியுடன் பா.ஜனதாவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றியை நோக்கி நகர்கின்றன.
    • பா.ஜனதா எப்போதும் தேசம்தான் முதல் என்ற கொள்கையில் செயல்படுகிறது.

    ஐதராபாத்:

    பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். அவர் இன்று காலை கரீம்நகர் மாவட்டம் வெமுலவாடாவில் உள்ள ராஜராஜேஸ்வர சாமி கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் அர்ச்சகர்கள் திலகமிட்டனர்.

    பின்னர் பிரதமர் மோடி, கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

    நேற்று 3-ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் 3-வது முயற்சியும் முடக்கப்பட்டது. இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மக்களின் ஆசியுடன் பா.ஜனதாவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றியை நோக்கி நகர்கின்றன.

    பா.ஜனதா எப்போதும் தேசம்தான் முதல் என்ற கொள்கையில் செயல்படுகிறது. ஆனால் காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் குடும்பமே முதலில் என்ற கொள்கையில் செயல்படுகின்றன. அவர்களின் அரசியல் கட்சிகள் 'குடும்பத்தால், குடும்பத்திற்காக, குடும்பத்திற்கானது என்பது போன்று செயல்படுகின்றன. குடும்பமே முதலில் என்ற கொள்கையால் பி.வி.நரசிம்மராவை காங்கிரஸ் அவமரியாதை செய்தது.

    அவர் இறந்த பிறகும் அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்தில் நுழைய மறுத்துவிட்டது. பி.வி. நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதன் மூலம் பா.ஜனதா-தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மரியாதை செலுத்தியது.

    காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் வேறுபட்டவை அல்ல. ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் பூஜ்ஜிய ஆட்சி ஆகியவை இந்த இரு கட்சிகளையும் இணைக்கிறது. இரு கட்சிகள் இடையே ஊழல் பொதுவான காரணியாக உள்ளது.

    காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.

    பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார். ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • ஏராளமான புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளது.
    • மோடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மென்மை போக்கை கடைபிடிக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாட்டில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்தவில்லை. மத்தியில் உள்ள ஆளும்கட்சியின் விருப்பத்தின்படியே தேர்தலை நடத்துகிறது. உதாரணத்துக்கு தேர்தல் அறிவிப்புக்கு 2 நாட்களுக்கு முன்புதான் புதிய தேர்தல் ஆணையர்களை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு நியமித்துள்ளது. நேர்மையான, வெளிப்படையான தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும்.

    ஆனால், தேர்தலில் வெற்றிப் பெற மாட்டோம் என்ற பயத்தின் காரணமாக ஆளும் பா.ஜ.க.,வினர், நம் நாட்டை இந்து தேசம் என்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசும்போது, முஸ்லிம்கள் நாட்டில் ஊடுருவிகள் என்று கூறியுள்ளார்.

    அதுமட்டுமல்ல, நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்கள் என்றும் இந்துக்களின் வளம் எல்லாம் முஸ்லிம்களுக்கு சென்று விடுகிறது என்றெல்லாம் பேசியுள்ளார்.

    இதுபோல குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்திலும் பேசியுள்ளார். இதுகுறித்து ஏராளமான புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளது.

    ஆனால், மோடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மென்மை போக்கை கடைபிடிக்கிறது. பா.ஜ.க. தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மட்டும் அனுப்புகிறது. எனவே, மோடிக்கு எதிராக நான் கடந்த 1-ந்தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில், மதநல்லிணக்கத்துக்கு எதிராக பேசும் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், மேற்கொண்டு இது போல பேசுவதை தடுக்கவும், தேர்தலை நேர்மையாக நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கலைமதி ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி கோரிக்கை விடுத்தனர். அப்போது, பிரதமருக்கு எதிரான இந்த வழக்கை, ஐகோர்ட்டு பதிவுத்துறை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், மனுவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய மனுவை தாக்கல் செய்யும்படி வக்கீல்களுக்கு உத்தரவிட்டனர்.

    • 93 தொகுதிகளில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    • பேருந்தில் தீ பிடித்தவுடன் தேர்தல் அதிகாரிகள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.

    மத்தியப்பிரதேசம்:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மாதம் 19, 26 மற்றும் மே 7-ந்தேதி என 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    நேற்று நடைபெற்ற 3-வது கட்ட தேர்தலில் உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற 93 தொகுதிகளில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து 4  எந்திரங்கள் சேதம் அடைந்துள்ளன.

    நேற்று வாக்குப்பதிவு முடிந்த பிறகு பேதுல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுலாவில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டன. அப்போது திடீரென பேருந்தில் தீப்பிடித்தது.

    பேருந்தில் தீ பிடித்தவுடன் தேர்தல் அதிகாரிகள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். இருப்பினும் பேருந்தில் இருந்த 4 எந்திரங்கள் சேதம் அடைந்தன.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இதுவே பெரிய ஆதாரமாக அமையும் என நம்புகிறேன்.
    • வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கள ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

    இந்த கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.

    சித்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த திருமாவளவன் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாநிலத் தலைவர் சர்மிளாவை சந்தித்தோம் ஆனால் கூட்டணி அமையவில்லை.

    விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம்.

    தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வருகிறோம்.

    வருகிற 9-ந் தேதி நெல்லூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜுவை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறேன். 11-ந் தேதி மும்பை சென்று சிவசேனா கட்சி வேட்பாளர் அணில் தயா சாயை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

    மோடியை 3-வது முறையாக பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதால் இந்திய அளவில் பா.ஜ.க. மீது அதிருப்தி மேலோங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இதுவே பெரிய ஆதாரமாக அமையும் என நம்புகிறேன்.வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கள ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க.வும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.
    • 3 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்ததாக தகவல்.

    சண்டிகர்:

    அரியானாவில் ரந்திர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பிர் சிங் சவான் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்று, காங்கிரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்திர சிங் ஹூடா முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதை தெரிவித்தனர்.

    2019 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், மாநிலக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 90 தொகுதிகள் உள்ள அரியானாவில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க.வும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.

    மனோகர்லால் கட்டார் முதல்வராகவும், துஷ்யந் சவுதாலா துணைமுதல்வராகவும் பதவியேற்றனர் கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்தார். இதையடுத்து மனோகர்லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.

    இந்தச்சூழலில் தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்ததாக தகவல் வெளியானதால் சூழப்பம் ஏற்பட்டது. ஆனால் தங்களுக்கு முழு ஆதரவு இருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம்.
    • ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை.

    லக்னோ:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த ஆண்டு இறுதியில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்து இருந்தார் .

    அதன்படி கடந்த ஒரு வருடமாக தீவிரமாக செயல்பட்டு வந்தார் ஆகாஷ் ஆனந்த். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம்.

    இந்த நிலையில் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாயாவதி அறிவித்து உள்ளார். அவர் 'அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை' கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

    என்ன காரணத்துக்காக ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை.

    கடந்த மாத இறுதியில், தேர்தல் கூட்டத்தில் ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, நடத்தை விதிகளை மீறியதாக ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீதாபூர் பேரணியில் பேசிய ஆகாஷ் ஆனந்த், "இந்த அரசாங்கம் ஒரு புல்டோசர் அரசு, துரோகிகளின் அரசு. ஆப்கானிஸ்தானில் தலிபான் போன்று பா.ஜ.க. அரசாங்கத்தை நடத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,000 கோடி எடுத்த திருடர்களின் கட்சி பா.ஜ.க." என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தி பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது.
    • காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பது இப்போது அம்பலமாகிவிட்டது.

    புதுடெல்லி:

    அமேதி தொகுதியில் பா.ஜ.க.வேட்பாளராக போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று நடைபெற்ற பேரணியின்போது பேசியதாவது:-

    இதுவரை நான் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். ஆனால் இப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் நான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். உங்களால் பாகிஸ்தானையே கவனிக்க முடியவில்லை.

    அமேதியை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே என்ன உறவு? இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாகிஸ்தான் மீது பாசம் காட்டுவது ஏன்? ராகுல்காந்தி பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது.

    காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. எனது வார்த்தைகள் பாகிஸ்தான் தலைவர்களை சென்றடைகிறது என்றால், எல்லையில் பயங்கரவாதிகளை கொல்ல பயன்படும் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் மோடி நிறுவிய அமேதி இது என்பதை நான் அவர்களுக்கு கூற விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
    • தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆரம்பத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தார்.

    திருப்பதி:

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெலுங்கானா மாநிலத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் தெலுங்கானா பா.ஜ.க முன்னாள் தலைவர் பண்டி சஞ்சயை ஆதரித்து கரீம் நகரில் பிரசாரம் செய்தார்.

    பண்டி சஞ்சய் மற்றும் தெலுங்கானா மாநில தலைவர்களின் பாத யாத்திரைகள் இந்த மாநிலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இதனை பார்த்து தான் நான் தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டேன். மக்களுக்காக நடப்பது எளிதல்ல.

    கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாதங்களை அழித்து தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வஞ்சகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

    இதனால் பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


    இன்னும் 5 நாட்கள் தான் தேர்தல் பிரசாரம் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று 100 வாக்குகளை பெறுங்கள். தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆரம்பத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தார்.

    சோனியா காந்தியின் அழைப்பிற்கு பிறகு அவர் பிரதமருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அமித்ஷா குறித்த போலி வீடியோக்களை உருவாக்குவதில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் பாஜக தலைவர்கள் சட்ட விரோத முஸ்லிம் இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியின் விமர்சனங்களுக்கு எதிராகவும் அண்ணாமலை பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் அவருடைய பிரசாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • ராஜாம்பேட்டை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கிரண் குமார் ரெட்டிக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
    • மோடி வருகையையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 13-ந்தேதி ஆந்திரா, தெலுங்கானாவில் நடைபெறுகிறது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ரோடு ஷோ மற்றும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இன்று காலை தெலுங்கானா மாநிலத்திற்கு வந்தார். கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ரோடு ஷோவில் கலந்து கொண்ட மோடி பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பீலேரு வருகிறார். அங்கு ராஜாம்பேட்டை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கிரண் குமார் ரெட்டிக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    மாலை 5 மணிக்கு விஜயவாடா செல்கிறார். அங்கு பந்தர் சாலையில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தின் அருகில் இருந்து பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார்.

    இந்த ரோடு ஷோவில் ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்.

    மோடி வருகையையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரோடு ஷோ நடைபெறும் இடங்களில் பலூன்கள், டிரோன்கள் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • இரவு 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    மாலை வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், நேற்று இரவு 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, 13 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் மொத்தம் 64.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 81.61 சதவீதம்

    பீகார் 58.18 சதவீதம்

    சத்தீஸ்கர் 71.06 சதவீதம்

    தாத்ரா, டயு மற்றும் டாமன் 69.87 சதவீதம்

    கோவா 75.20 சதவீதம்

    குஜராத் 58.98 சதவீதம்

    கர்நாடகா 70.41 சதவீதம்

    மத்திய பிரதேசம் 66.05 சதவீதம்

    மகாராஷ்டிரா 61.44 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் 57.34 சதவீதம்

    மேற்கு வங்காளம் 75.79 சதவீதம்

    • காலை முதலே ஆர்வமுடன் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
    • 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை துவங்கியது.

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குப் பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    இன்று (மே 7) உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.

    இந்த நிலையில், இன்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 75.26 சதவீதம்

    பீகார் 56.55 சதவீதம்

    சத்தீஸ்கர் 66.99 சதவீதம்

    தாத்ரா, டயு மற்றும் டாமன் 65.23 சதவீதம்

    கோவா 74.27 சதவீதம்

    குஜராத் 56.76 சதவீதம்

    கர்நாடகா 67.76 சதவீதம்

    மத்திய பிரதேசம் 63.09 சதவீதம்

    மகாராஷ்டிரா 54.77 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் 57.34 சதவீதம்

    மேற்கு வங்காளம் 73.93 சதவீதம்

    ×